Advertisement

புனித கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துகள்!


புனித கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துகள்!

₹ 85

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிய மத சிந்தனைகளை வெளிப்படுத்தும் நுால். கிறிஸ்துவ மத பழைய ஏற்பாட்டில் துவங்குகிறது. பின், புதிய ஏற்பாடு பற்றி விளக்கி, ‘இல்லாதவனுக்கு கொடு’ என்ற தர்ம வார்த்தைகள் உதயம் ஆவதை தெரிவிக்கிறது. தமிழ் மொழிக்கு பைபிள் வந்த வரலாறும் உள்ளது. இஸ்லாம் மதத்தை மார்க்கம் என குறிப்பிடுகிறது. திருக்குர்ஆன் வசனங்கள் எடுத்தாளப்பட்டு உள்ளன. பாலைவனத்தில் அமைந்துள்ள குறைந்த ஆழமுள்ள கிணறு வற்றாமல் தண்ணீர் வழங்குவதை இறையருள் என்கிறது. கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களில் பெயர் ஒற்றுமை பட்டியல் வியப்பு தருகிறது. மதம் கடந்து படிக்க வேண்டிய நுால். – சீத்தலைச்சாத்தன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்