அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எளிய நடையில் அமைந்த நுால். அம்பேத்கரின் தந்தை ராம்ஜியின் போராட்டக்குணம் தான் அம்பேத்கருக்கு உந்துதலாக இருந்ததாக குறிப்பிடுகிறது. பிறப்பு அடிப்படையில் இழிவு படுத்தப்படுவதை எதிர்த்த நிகழ்வுகள் கூறப்பட்டு உள்ளன. அதனால் அடைந்த இன்னல்களும் தரப்பட்டுள்ளன. பள்ளியில், கிணற்றில்...