சிவப்பு விளக்கிட்டு கதவுகள் மூடப்பட்டும் தண்டவாளம் கடக்கிறது பட்டாம்பூச்சி எனும் முதல் கவிதை கட்டுப்பாடுகள் பட்டாம்பூச்சியை தடுத்துநிறுத்த முடியாது என்ற உண்மையை உரக்கச்சொல்கிறது. தார்ச்சாலையில் வண்ண சாக்பீஸ்களால் வரையப்பட்ட கடவுள்கள் பெருமழையில் நகர்ந்து ஒதுங்குகிறார்கள், மீன் வாங்கியப்பின் மீதம்...