கர்மம், ஞானம், பக்தி ஆகியன செழித்த பாரத புண்ணிய பூமியில் இறையருளைப் பெற, அவரவர்க்குத் தகுந்த வழியில் நாடுகிறார்கள். அவற்றில், குறையிலா பக்தி செய்து இறைவனை நாடுவது சிறந்தது என்பது, பக்தர்கள் பலருடைய வாழ்விலிருந்து காட்டப்படும் நல்ல வழியாக உள்ளது. வடக்கே மீராவும், தெற்கே ஆண்டாளும் இந்த பக்தியை...