/ புத்தக மதிப்புரை / 108 திவ்யதேச தரிசனம் (பாகம் – 4)
108 திவ்யதேச தரிசனம் (பாகம் – 4)
மலைநாட்டு 13 திவ்ய தேசங்களின் வரலாறை படம் பிடித்து காட்டும் புத்தகம். மலைநாடு என்பது கன்னியாகுமரி, கேரளத்தை உள்ளடக்கியது. எங்கும் பச்சை பசேலென இருக்கும். பச்சை மாமலை போல் மேனியனான திருமால் இந்த பகுதியில் 13 இடங்களை தேர்ந்தெடுத்து, கோவில் கொண்டு அமர்ந்துள்ளதை குறிப்பிடுகிறது. ஒன்றில் அருள்பாலிக்கும் திருமால், பக்தனான படைத்தளபதி வெற்றிக்காக, அவன் பாடிய படை சங்கீர்த்தனம் கேட்டே, எதிரி படைக்கு புத்தி சொன்ன வரலாறு பரவசத்தில் ஆழ்த்துகிறது. இது போன்ற தகவல்களை திரட்டி தந்துள்ள நுால். – தி.செல்லப்பா




