/ சுய முன்னேற்றம் / ஒரு டாக்டரின் இலட்சியப் பயணம்
ஒரு டாக்டரின் இலட்சியப் பயணம்
வறுமையிலும் லட்சிய வேகத்தால் நினைத்ததை முடித்தவரின் வாழ்க்கை பயண நுால். இலக்கு இருந்தால் படிப்படியாக முன்னேற முடியும் என நம்பிக்கை விதைக்கிறது. முயற்சியை கேலி செய்த மக்களுக்கு பேரும், புகழும் பெற்று பாடம் புகட்டியதை சொல்கிறது. இளைஞர்களை முன்னேற்றத்துக்கு துாண்டும் வகையிலான கருத்துகள் உள்ளன. குடும்பத்தில் ஏழு டாக்டர்களை உருவாக்கிய சாதனையை முன்வைக்கிறது. சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்ட நிகழ்ச்சி நெஞ்சை தொடுகிறது. வாழ்வதற்கு உற்சாக டானிக் தரும் சுயசரிதை நுால்.– சீத்தலைச் சாத்தன்