/ கதைகள் / அக்னி வீரன்
அக்னி வீரன்
திருப்பங்கள் நிறைந்த வரலாற்று நாவல். அக்னி வீரர்களை கொண்ட நாட்டின் முக்கிய படையில் இளைஞன் சேர விரும்புகிறான். தாய் அவனை வீரனாக வளர்க்கவில்லை; அந்த தாய் தடை போடுவதற்கு என்ன காரணம் என்பதை சஸ்பென்சாக வைத்து பின்னப்பட்டுள்ளது. அக்னி படையில் துணை தளபதியாகும் வாய்ப்பு இளைஞனுக்கு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை தந்தவர் பற்றிய சஸ்பென்ஸ் தொடர்கிறது. வரலாற்றுடன் காதலையும் சேர்த்து ஆர்வப்படுத்துகிறது. திருப்பங்களை ஏற்படுத்தி, அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பை துாண்டும் நாவல் நுால். – முகிலை ராசபாண்டியன்




