/ வாழ்க்கை வரலாறு / அம்பேத்கர்
அம்பேத்கர்
அறிஞர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக உரைக்கும் நுால். இந்திய விடுதலைக்காக பாடுபட்டது, பொறுப்புகளை வகித்தது உட்பட தகவல்களை உள்ளடக்கியுள்ளது.இந்த புத்தகம், 34 தலைப்புகளில் உருவாக்கப்பட்டு உள்ளது. அம்பேத்கர் பிறப்பு துவங்கி, அந்த கால சமூகத்தில் நிலவிய தீண்டாமை கொடுமை மற்றும் சமூக நிலை பின்னணியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் உயர்கல்வி, வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்பு குறித்தும் உள்ளன.ஏழை மக்களின் தலைவராக உயர்ந்து பாடுபட்டதும் கூறப்பட்டுள்ளது. அரசியலில் காந்திஜியுடன் முரண்பாடு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க கடும் உழைப்பு செலுத்திய செய்திகள் உள்ளன. அம்பேத்கரின் தியாக வாழ்வையும், உழைப்பையும் பறைசாற்றும் நுால்.– ஒளி