/ தீபாவளி மலர் / அம்மன் தரிசனம்
அம்மன் தரிசனம்
சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதீ தீர்த்த சுவாமி அருளுரையுடன் மலர்ந்துள்ளது அம்மன் தரிசனம் தீபாவளி மலர். ஆன்மிகத்தில் ஸ்ரீ சங்கர பகவத்பாதர் காட்டிய நல்வழி, நமாமி பகவத்பாதம், செய்நன்றி மறவாதவர், தீப ஒளி, பகவான் வழிவிடுவான், வாழ்க்கையின் ஆறு பருவங்கள், புராணங்களின் பெருமை, குருபக்தி என பல தலைப்புகளில் கட்டுரைகள், அருளாசி செய்திகள் உள்ளன.தலை தீபாவளி கொண்டாடுவதன் சிறப்பை எளிமையாக அறிமுகம் செய்கிறது. இந்த பிறவியிலே ஞானம் கிட்டுவதற்கான வழியை, அபிநவ வித்யாதீர்த்த சுவாமியின் அருள் மொழியை படித்தால் காணமுடியும். நீதிக்கதைகளும் இடம்பெற்று உள்ளன. இந்த மலர், 56 படைப்புகளை வழங்கி தீபாவளியை குதுாகலமாக்கியுள்ளது. – ஒளி