/ ஆன்மிகம் / அமோக பலன் தரும் அதிக மாதம்

₹ 100

அதிக மாதம் என்பதன் பெருமை, சிறப்புகளை விரிவாக தரும் நுால். செய்ய வேண்டிய, செய்யக்கூடாத செயல்கள் பற்றிய விபரங்களும் உள்ளன. ஒரு ஆண்டுக்கு 12 மாதம் என்று அறிவோம். ஆனால், 33 மாதங்களுக்கு ஒரு முறை அதிக மாதம் வரும் என்று குறிப்பிடுகிறது. அதிக மாதத்தில் விரதத்தை, ஆண், பெண் இருபாலரும் அனுஷ்டிக்கலாம் என வலியுறுத்துகிறது. அதிக மாத சிறப்பை விவரிக்கும் புராணக் கதைகளும் கூறப்பட்டுள்ளன. சாதாரண நாளில் செய்யும் பூஜைக்கு ஒரு மடங்கு பலன் என்றால், அதை அதிக மாதத்தில் செய்தால், 33 மடங்கு பலன் கிடைக்கும் என்கிறது. அதிக மாதம் கணக்கிடப்படுவதையும் எடுத்து கூறுகிறது. உன்னத நிலை அடைய வழி காட்டும் புத்தகம். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை