/ ஆன்மிகம் / ஆண்டவன் ஆபரணம் ஆன்மீகம்
ஆண்டவன் ஆபரணம் ஆன்மீகம்
ஒருவன் நடத்தையே அவனை உயர்ந்தவன் என உயர்த்திக் காட்டும் என்ற நீதியை எடுத்தியம்பும் நுால்.ஹிந்து மதத்தின் ஆணிவேர் ஆன்மிகம். அது, ஆண்டவன் அணியும் ஆபரணம். இதில், யக்ஷ பிரஸ்னா ஒரு சிறிய ஆபரணம். யக்ஷன் தர்மரிடம் கேட்ட 123 கேள்விகளும், அதற்கு தர்மரின் 123 பதில்களும் இதில் அடக்கம். சாதாரண கேள்வி – பதில் போல் இருந்தாலும், வாழ்க்கையின் தத்துவம் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கி சொல்லப்பட்டுள்ளது. வேத மந்திரங்களை எப்படி ஓத வேண்டும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இல்லறத்தில் கடைப்பிடித்தொழுக வேண்டிய ஐந்து கடமைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அரிதாய் பெற்ற மனிதப்பிறவி பயனுற வாழ்வதற்கு, அருமையான அறிவுரைகளை கூறும் ஞானப்பெட்டக நுால்.– டாக்டர் கார்முகிலோன்




