/ வாழ்க்கை வரலாறு / அனுபவங்கள் 50

₹ 200

வங்கி ஊழியரின் அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சுயசரிதை போல் அமைந்துள்ளது. வங்கி பணியில் கிடைத்த அனுபவங்கள் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன. குறுந்தலைப்புகளில் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பணியின் போது பிறருக்கு உதவிய பாங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பணியில் எழுந்த நடைமுறை சிக்கல்களை தீர்த்த வழிமுறையும் விளக்கப்பட்டுள்ளது. பணியில் கவனம் பிசகாமல் செயல்பட வேண்டியதை சுட்டுகிறது. பணியில் ஏற்பட்ட மகிழ்ச்சி, துக்கம், பொறாமை, ஏக்கம், இயலாமை போன்றவற்றை நிகழ்வு களாக விவரிக்கிறது. பணியில் சேர்ந்தபோது ஏற்பட்ட வினோதமான மனநிலையையும், ஒவ்வொரு நாளும் சந்தித்த சவால்களையும் எடுத்துரைக்கிறது. பணிக்கால நிகழ்வுகளை சுவாரசியம் குன்றாமல் தரும் சுயசரிதை நுால். – ராம்


புதிய வீடியோ