/ அறிவியல் / அனுவும் ஆதியும்

₹ 300

அன்றாட சூழ்நிலைகளில் அறிவியல் ரகசியங்களை விளக்கும் நுால். புதுமையாக அறிவியல் கருத்தை சிறுவர்களுக்கு புரிய வைக்கிறது. ஒரு புனைகதை போல் சூழல் தொடர்புடைய அறிவியல் கோட்பாடுகளை சித்திரமாக்கி விளக்குகிறது. உதாரணமாக, பூரி ரகசியம் என்ற அத்தியாயத்தில், பூரியில் உப்பிய துகள்களின் தன்மையை, சிறுவர் விசாரணை வழியாக சோதிக்கும்படி கற்பனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான ஓவியங்கள், குழந்தைகளை கவரும். விளையாட்டு வடிவில் அறிவியலை ஆழமாக அறியச் செய்கிறது. பள்ளி, வீட்டில் குழந்தைகள் சுயமாக பயிற்சி மேற்கொள்ள உகந்தது. ஆசிரியர், பெற்றோருக்கு உதவும் நுால். – இளங்கோவன்


சமீபத்திய செய்தி