/ ஆன்மிகம் / அருள்பதி ஆற்றுப்படை
அருள்பதி ஆற்றுப்படை
அய்யா வைகுண்டர் வழிபாட்டு முறையை காட்டும் ஆற்றுப்படை நுால். கிராமத்து வளம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டோரை எழுச்சி பெற வைத்த அய்யா வைகுண்டர், மீசை வரி, தோள் துண்டுக்கு வரி என கொடுமைக்கு எதிராக போராடிய சிறப்பு கூறப்பட்டுள்ளது. துண்டை தோளில் போட அனுமதிக்காத காலத்தில் தலையில் பாகையாக அணிவித்து சமூகத்துக்கு சுயமரியாதை கற்று தந்ததை கூறுகிறது. இறைவன் எழுந்தருளிய பதியில் நிலைக்கண்ணாடி வைத்து பிரதிபிம்பத்தை தரிசிக்க வைத்ததை குறிப்பிடுகிறது. இந்த வரலாற்று செய்திகளை தெளிந்த நடையில் ஆசிரியப்பாவாக படைத்து தந்துள்ளது. உண்மையான சமூக சீர்திருத்தவாதி அய்யா வைகுண்டரின் பெருமை மிகு வரலாறாக படைக்கப்பட்டுள்ள நுால். – சீத்தலைச்சாத்தன்