/ கதைகள் / அவள் விருச்சிகம் அவன் ரிஷபம்

₹ 90

விருச்சிகம் என்றால் தேளாகும்; அது கொட்டும். ரிஷபம் என்றால் மாடாகும்; அது முட்டும். கொட்டுவதும், முட்டுவதும், கணவன், மனைவியானால்... குடும்பத்தில் என்ன நடக்கும் என்பதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கதைகளின் தொகுப்பு நுால்.முதல் குறு நாவல் நகைச்சுவையுடன் கதை நகர்கிறது. இதில் உள்ள உரையாடல்கள் சுவாரசியம் தருகின்றன.‘அவளுக்கு ஒரே ஒரு அம்மா மட்டும் தான்...’‘எல்லாருக்கும் ஒரே ஒரு அம்மா தானே...’மற்றொரு இடத்தில்...‘ஆம்பளைகளையே நம்ப முடியாது; நான் வரலை...’‘ஆம்பளைங்களை யார் நம்பச் சொன்னது; என்னை நம்பி வா?’‘ஓ... ஓ... அப்ப நீங்க ஆம்பளை இல்லையா...’இப்படி சுவாரசியம் தருகிறது.அடுத்துள்ள கதை, இயந்திரத் தாரகை. நாளைய ரோபோக்கள் பற்றிய கதை. பொழுதுபோக்கும் விதமாக படைக்கப்பட்டுள்ளது.– சீத்தலைச் சாத்தன்


புதிய வீடியோ