/ கவிதைகள் / அழகு – பியூட்டி
அழகு – பியூட்டி
படைப்பின் அழகை மேற்கோள் காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். முதலில் தமிழ்த்தாய் வணக்கம், நான்கே வரிகளில் நன்முத்தாய் ஒளிர்கிறது. ‘பகலை பரிசாய் பார்க்கும் உலகம், இகமதை ஈர்க்கும் இருளும் அழகு’ என்று சொல்லி இருப்பது, பார்க்கும் அனைத்திலும் அழகே பிரதானம் என படம் பிடித்துக் காட்டுகிறது. ‘வாசமலர்கள் வான்மழை மேகம் தேசம் எங்கும் தெவிட்டா அழகு’ என கற்பனை கரையை கடக்கிறது. ‘வீழும் இடந்தனை விதைகள் தேடா வீழும் இடந்தனில் விளையும் அழகு’ என வாழ்க்கை தத்துவம் வரைந்து காட்டப்பட்டுள்ளது. பொறுப்பான சமுதாய பார்வையுடன் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும், வற்றாத தேன் ஊற்றாய் அமைந்துள்ள கவிதை புத்தகம்.– டாக்டர் கார்முகிலோன்




