/ சிறுவர்கள் பகுதி / சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்
அக்பர் அவையில் பீர்பாலின் செயல்பாடுகள், அறிவு கூர்மையை வியப்பது போல் அமைந்த கதைகளின் தொகுப்பு நுால். நம்பிக்கை அடிப்படையில் செய்யும் செயல்கள் வெற்றியை தேடித்தரும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. இதற்கு பீர்பால் கையாண்டுள்ள உத்தி நகைச்சுவையாக உள்ளது. அக்பரை கேலி செய்வது போல அமைந்துள்ளது.பீர்பால், பாரசீக மன்னரை சந்தித்த கதை சுவாரசியமானது. அவரை கண்டுபிடிப்பதில் இருந்த புதிரை விடுவிப்பது தான் உச்சமாக அமைந்துள்ளது. எல்லா கதைகளும் அறிவு நுட்பத்தை வெளிப்படுத்துகின்றன. முழுப்பக்க அளவில் படங்களும் உள்ளன. பீர்பால் புத்திசாலித்தனத்தை காட்டும் நுால்.– முகிலை ராசபாண்டியன்