/ பயண கட்டுரை / கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)
கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)
வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 220). ஆனந்த விகடன் ஆசிரியராக கல்கி பணியாற்றியபோது இலங்கை பயணத்தை மேற்கொண்டார். உடன் சென்றவர் இப்போது போல் போட்டோகிராபர் அல்ல. பிரபல ஓவியர் மாலி. இலங்கையை பொற்சித்திரமாக கல்கி தீட்டினார் என்றால் - ஓவியர் மாலி இலங்கை மக்களின் உருவங்களை ஓவியமாகத் தீட்டித் கொண்டு வந்து விட்டார். கல்கி பிரியர்களுக்கு ஒரு கற்கண்டு. சுவைத்து மகிழலாம். அந்த நாள் நினைவுகளில் மூழ்கலாம்.