₹ 180

ரஹ்மத் பதிப்பகம், 6, இரண்டாவது மெயின் ரோடு, சி.ஐ.டி., காலனி, மயிலாப்பூர், சென்னை-600 004. (பக்கம்: 160.)திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமத் தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வெற்றிக்கொடி நாட்டிய முஸ்தபா என்ற தமிழரது வாழ்க்கை வரலாறு இந்த நூல். சிங்கப்பூரில் நாளைய மாற்றுத் தொழிலில் முன்னணி வர்த்தகராக, அவர் பெரும் பொருள் ஈட்டி சமூகத்தில் மிக உயர்ந்த ஒரு அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், கல்வி, சமயம், தமிழ் மொழி ஆகியவற்றுக்கு அவர் செய்திருக்கும் தொண்டுகளைப் படிக்கும் போது, இந்தக் காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருக் கின்றனரா என்ற மலைப்பு ஏற்படுகிறது. ஒரு மனித நேயப் பண்பாளரைத் திறம்படப் படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஆசிரியர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை