/ சட்டம் / THE INDUSTRIAL DISPUTES ACT 1947 A COMPANION

₹ 200

வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21, லோகநாதன் நகர், இரண்டாவது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 94) 1947ம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தில் வகை செய்யப்பட்ட ஏறத்தாழ 40 பிரிவுகளை சுமார் 200 கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் சுருக்கமாக நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.தொழில் - விளக்கம், தொழிலாளி, தகராறுகள், அதிகார அமைப்புகள், பணி நிபந்தனைகள், வேலைநிறுத்தம், கதவடைப்பு, லே ஆஃப், ஆட்குறைப்பு, மூடுதல், தண்டனைகள் போன்று பத்து அத்தியாயங்களாகப் பகிர்ந்து வினா - விடை முறையில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சட்டம் - 1956ஐப் போன்று முழுமையாக அமையப் பெற்ற சட்டமல்ல தொழிற் தகராறுகள் சட்டம் 1947. எனினும், அடிப்படைச் சட்டத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. எந்த ஒரு சட்டப் பிரிவிற்கும், அதற்குரிய முக்கிய வழக்குகளை குறிப்பிடாததது பெருங்குறையே. வழக்குகள் எதையுமே கோடிட்டுக் காட்டாமல் தொழிற் தகராறுகள் சட்டத்தைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. தொழிலாளர்களுக்கோ, மாணவர்களுக்கோ அல்லது நிர்வாகத்தினருக்கோ உதவும் வகையில் முக்கிய வழக்கின் விவரங்களும், படிவங்களும் இணைக்கப்பட்டால் ஓரளவு உறுதுணையாய் இருக்கும். அடுத்த பதிப்பிலாவது நூலாசிரியர்கள் இக்குறையைக் களைய வேண்டும்


புதிய வீடியோ