/ வர்த்தகம் / வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி?

₹ 75

விஜயா பதிப்பகம், 20,ராஜவீதி, கோயமுத்தூர் - 641001. (பக்கம் 144). தொலைபேசி: 0422-2394614இந்த நூலாசிரியர் ஏற்றுமதி இறக்குமதி துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் உடையவர். உலக அளவில் நடைபெற்ற ஏற்றுமதி ஆவணங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர் ஆவார். தினமலர் நாளிதழில் பங்குச் சந்தை வர்த்தகம் பற்றி எழுதி வருபவர்.இம்மாதிரி நெருடல்கள் நிறைந்த விஷயத்தை தமிழில் வடிப்பதில் வெற்றி கண்டிருக்கிறார். ஏற்றுமதித் தொழிலில் உலகம் பூராவும் உள்ள பல விஷயங்களை தெரிந்து கொண்டால் தான் குழப்பம் இன்றி வர்த்தகம் நடக்கும். அதற்கு இவர்காட்டும் வழி சிறப்பானது. கொஞ்சம் ஆங்கில அறிவும்,விற்பனைத் திறமையும், பயண ஆர்வமும் இருந்து இப்புத்தகத்தைப் பின்பற்றினால் எளிதாக எல்லாரும் ஏற்றுமதியாளர் ஆகிவிடலாம்.தமிழில் விளக்கத்துடன் ஆங்கில வார்த்தைக் குறிப்புகளும் உள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட தனித்தனி தலைப்புகளில் பிரித்தளித்த பாங்கு சிறப்பானது. தமிழகத்தில் இருந்து எந்தெந்த பொருட்கள் எங்கே ஏற்றுமதியாகிறது என்ற அட்டவணையும் உண்டு. ஏற்றுமதி தொடர்பான தொழிலில் இருக்கும் அனைவரது கைகளிலும் தவழ வேண்டிய நூல்


சமீபத்திய செய்தி