/ இலக்கியம் / அற இலக்கியச் சமுதாயம் - நான்மணிக்கடுகை
அற இலக்கியச் சமுதாயம் - நான்மணிக்கடுகை
வேலகம், 67, வீரபத்ரசாமி கோவில் தெரு, இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008. (பக்கம்:80)சிங்கப்பூரில் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் நூலாசிரியை, பதினெண் கணக்கு நூல் வரிசையைச் சேர்ந்த நான்மணிக்கடுகை காட்டும் சமுதாயக்கூறுகளை, சமூகப் பழக்க வழக்கங்களை, சமூகவியல் பார்வையுடன் பகுப்பாய்வு செய்து எழுதியிருக்கிறார். நூலின் கடைசிப் பகுதியாக இணைத்துள்ள "பொருள் அடைவு'ம், "சொற் பொருள் விளக்க'மும் நூலாசிரியையின் அறிவாற்றலை, ஆய்வு செய்த பாங்கினை நமக்கு உணர்த்துகிறது. மிகச் சிறந்த பணியை செம்மையுடன் செய்து முடித்திருக்கிறார் சு.உஷா.