/ ஆன்மிகம் / ஸ்ரீ ராமகிருஷ்ண சரணம்
ஸ்ரீ ராமகிருஷ்ண சரணம்
தமிழில் டாக்டர். பு.ஹரிஹரன், வெளியீடு ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 96)சசி மகராஜ் என்று அழைக்கப்படும் சுவாமி ராமகிருஷ்ணாநந்தர் தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கத்தை துவக்கியவர். ஷ்ரீராமகிருஷ்ணர் மீது மகா அன்பும், பக்தியும் கொண்டவர். அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த நூல். மிக உயர்ந்த ஆன்மிக நிலையில் பிறருக்கு எழுதிய இந்தக் கடிதங்கள் படிப்பவர்களுக்கு உயர்ந்த ஞானத்தையும், அசையாத நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கவல்லவை. படித்து பயன்பெற வேண்டிய நூல்