/ பொது / பேச்சரவம் கேட்டிலையோ
பேச்சரவம் கேட்டிலையோ
வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18திராவிட இயக்க அரசியலின் முற்போக்கான சாராம்சத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம்தலைமுறையைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் அக்கறைகள் பரந்துபட்டவை. கலை, இலக்கியம், நாடகம், அரசியல், சமூகம் என ஒரு தீவிர செயல்பாட்டாளராகப் பணியாற்றிவரும் அவர் தனது நம்பிக்கைகளை மிகத் தெளிவாக இந்த நேர்காணல்களில் முன்வைக்கிறார். விவாதங்களை திறந்த மனதுடன் எதிர் கொள்ளும் நேர்த்தியும் தனது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காத உறுதியும் அவரது உரையாடல்களுக்கு உயிரூட்டுகின்றன. மனத்தெளிவும் நேர்மையும் கொண்ட இந்தப் பேச்சுகளின் வழியே தமிழச்சி ஒரு தனித்துவமான ஆளுமையாக வெளிப்படுகிறார்.