/ பொது / STEPS TO SUCCESS

₹ 150

தமிழில்: வானதி திருநாவுக்கரசு. ஆங்கில மொழியாக்கம்: டாக்டர் எஸ்.கோபாலி. வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 448. விலை: ரூ.150). "இன்று நாட்டை வழி நடத்திச் செல்ல தூய்மையான தலைவர்கள் இல்லை. தலைமையற்ற வெற்றிடம் விரிந்து கொண்டே போகிறது' (பக்.14) இப்படி நாட்டைப் பற்றிய அக்கறையுள்ள சிந்தனையாளர் வானதி திருநாவுக்கரசு, தேவகோட்டையில் பிறந்து இன்று தெருவெல்லாம் தமிழ் படிக்க புத்தகப் பதிப்புத் துறையில் புதுமையைப் புகுத்தி சுமார் 4700 நூல்களை வெளியிட்டுச் சாதனை புரிந்துள்ளார். தமிழின் மீது அளவற்ற பற்றுமிக்க இச்சாதனையாளர் கடந்த 70 ஆண்டுகளாகத் தன் உயர்வுக்குப் படிக்கல்லாய் அமைந்த பல்வேறு நிலையில் உள்ள பெருமக்களை நினைவு கூர்ந்து தமிழில் "வெற்றிப் படிகள்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலை டாக்டர் கோபாலி, மிக எளிய நடையில், சரளமாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூலில், ஆங்கிலப் புலமைமிக்க டாக்டர் கோபாலியின் இம்மொழியாக்கம் ஆங்கிலம் படிக்க அஞ்சுபவர்களைக் கூட ஆர்வத்தில் ஆழ்த்தும் அற்புத படைப்பு. தோல்வியில் தொடங்கும் முதல் அத்தியாயம், ஒவ்வொரு தடைக்கல்லையும் வெற்றிப் படிக்கல்லாய் மாற்றும் வித்தகர் வானதி தோல்வியே வெற்றிக்கு அடிப்படை என்பதை தன் கடின உழைப்பாலும், உறுதியான கொள்கைகளாலும் நிரூபித்துள்ளதை அவரது அணுகுமுறைகளை நயம்பட மொழியாக்கம் செய்துள்ளார்


சமீபத்திய செய்தி