/ வாழ்க்கை வரலாறு / போதி தர்மர்
போதி தர்மர்
புத்தரின் சீடர் போதி தர்மர் மகாஜன பவுத்த பிரிவை பரப்பியதை எடுத்துரைக்கும் நுால். காஞ்சிபுரத்தில் பல்லவ இளவரசர், ‘மரணத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது’ என தேடலுடன் திரிந்தார். புத்த பெண் குருவின் சீடராகி தியானத்தால் விடை கண்டு, ஞானம் பெற்று போதி தர்மரானதாக செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குருவின் விருப்பத்தால் அண்டை நாடான சீனா சென்று மகாஜன புத்த முறைகளை போதித்ததாக குறிப்பிடுகிறது. பின், புத்த பீடாதிபதியாகி தற்காப்புக் கலையைக் கற்பித்தது பற்றி கூறுகிறது. போதி தர்மர் பற்றி சுவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. தமிழக தவப்புதல்வராய் தோன்றி, உலகம் போற்றும் ஞானி போதி தர்மர் புகழ்பாடும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்