/ வாழ்க்கை வரலாறு / பிரிட்ஜஸ் டூ மை பாஸ்ட் (ஆங்கிலம்)
பிரிட்ஜஸ் டூ மை பாஸ்ட் (ஆங்கிலம்)
தொழிலதிபர் சுகல்சந்த் ஜெயின் ஆங்கில மொழியில் எழுதிய சுயசரிதை நுால். தொழிலில் வளர்ந்ததை எடுத்து கூறுகிறது. வணிக வாழ்வில் மனிதநேயத்துக்கு பங்குண்டு என்பதை விளக்குகிறது. கல்வி, மருத்துவம், விலங்கு நலத்தில் கவனம் செலுத்தி பங்களித்த செயல்பாடுகள் கவர்கின்றன. தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் அறிவுரைகள் நிரம்ப உள்ளன. பணியாளர்களோடு இணக்கம், சட்டத்தை மதித்தல், வணிகத்தில் நேர்மை, கொள்கை வகுத்து செயல்படுதல், நேர மேலாண்மை, அதிகார வரம்பை கடைப்பிடித்தல், பணியில் விழிப்புணர்வை வலியுறுத்துகிறது. திட்டமிட்ட உழைப்பால் தோல்விகளை புறந்தள்ளி வெற்றி பெற முடியும் என நம்பிக்கையை விதைக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




