/ கதைகள் / சிஸ்கோ கிட்

₹ 600

சாகசங்கள் அடங்கிய சித்திரக்கதைகளின் தொகுப்பு நுால். காமிக்ஸ் கதைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் சிஸ்கோவின் குதிரை சவாரியும், காடு, மலை, மேடு பயணங்களும், துப்பாக்கி சாகசங்களும், எதிரிகளை வேட்டையாடும் லாவகமும் சாகச உலகை கண்முன் காட்டுகின்றன. கருப்பு வெள்ளை சித்திரங்கள், தெவிட்டாத வசனங்கள், டமால், டுமீல் என விவரிக்கும் பாங்கு, சிறுவர் -– சிறுமியருக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ரயில் கொள்ளையன் கதை படு த்ரில்லிங்காக இருக்கிறது. ஓடும் ரயிலோடு பயணிக்கச் செய்கிறது. புதையலை தேடும் கதையில் குறிப்புகளும், பயணங்களும் சுவாரசியம் தருகிறது. நகைச்சுவையும் ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு கதையும் ஈர்ப்பதாக இருக்கிறது. சிறுவர்களுக்கு சாகச உலகம் சென்று வந்த திருப்தியை தரும் நுால். – ஊஞ்சல் பிரபு