/ கட்டடம் / பத்திரப்பதிவு சிக்கல்களும், தீர்வுகளும்
பத்திரப்பதிவு சிக்கல்களும், தீர்வுகளும்
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிக்கு வழிகாட்டும் நுால். பதிவுத்துறை நிறைவேற்றும் சட்டப்பூர்வ செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது.தமிழக பதிவுத்துறையின் அமைப்பு, செயல்பாடுகள், துறையில் நடைபெறும் பணிகள் குறித்த விபரங்கள் முழுமையாக தரப்பட்டுள்ளன. துறையின் வரலாறு, நிர்வாக சட்டங்கள், பதிவுத்துறை தலைவர், மாவட்ட பதிவாளர் அலுவலக செயல்பாடுகளையும் அறியத் தருகிறது.சொத்து உட்பட ஆவணங்கள் பதிவு, சங்கம், சீட்டு நிதியம், கூட்டு பங்கு நிறுவனம், திருமணப் பதிவுகள், முத்திரைத்தாள் விற்பனை குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. புத்தகத்தின் இரண்டாம் பகுதி, கேள்வி – பதில் பாணியில் சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறது. பதிவுத்துறை செயல்முறை நுால்.– மதி