/ ஆன்மிகம் / தசாவதாரம்

₹ 100

பத்து அவதார புராண நிகழ்வுகளையும், சிறப்பையும் தெளிவான நடையில் எடுத்துரைக்கும் நுால். பிரம்மதேவனிடமிருந்த, அசுரர்களால் திருடப்பட்ட, வேத நுால்களை மீட்டு வருவதற்காக எடுத்த மச்ச அவதாரம், பாற்கடலுள் மூழ்கிய மந்திரகிரியை துாக்கி நிறுத்திய கூர்ம அவதாரம் போன்று வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன் என ஒன்பது அவதாரங்களின் நிகழ்வுகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.கலியுகத்தில் சம்பளம் என்ற கிராமத்தில், விஷ்ணு கீர்த்தி என்ற அந்தணருக்கு, குழந்தையாகப் பிறந்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்துவார்; அத்துடன் கலியுகம் முடிவுற்று, மீண்டும் கிருதயுகம் தொடங்கும் எனச் சுட்டப்பட்டுள்ளது. தசாவதாரத்தின் அரிய தத்துவங்களை எளிய நடையில் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தெய்வீக மணம் கமழும் வைணவ ஒளி வீசும் நுால்.– புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ