/ கட்டுரைகள் / டாக்டர் வல்லரசியின் கட்டுரைத் தொகுப்பு
டாக்டர் வல்லரசியின் கட்டுரைத் தொகுப்பு
பக்திச் சுவை, வாழ்க்கைக்கு துணைபுரியும் உரைகள், சிந்தனைச்சுடர் என்ற தலைப்புகளில் தகவல்கள் தரும் நுால். மகிழ்ச்சி குறித்து ‘எது நிலைத்த இன்பம்’ என்பதை தெரிவிக்கிறது. இதற்கு திருவாசக பாடல்கள் மேற்கோளாக தரப்பட்டுள்ளன. வள்ளலாரின் இறைநெறியை பின்பற்றினால், துன்பம் இல்லா நிலையை அடையலாம் என்கிறது. வள்ளலார் பாடல் பொருளை தேவையான பகுதிகளில் தருகிறது. ‘பகை கொள்ளவில்லை என்றால் போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது’ என்ற கம்பராமாயண கருத்தை ஒரு கட்டுரை தெளிவுபடுத்துகிறது. சங்க இலக்கியங்களில் பெண் புலவர்களின் பாடல்கள், உரிமைச் சிந்தனையை விதைப்பதாக கூறுகின்றன. வாழ்வியல் களஞ்சியமாக உள்ள நுால். – முகிலை ராசபாண்டியன்




