/ வாழ்க்கை வரலாறு / எப்போதும் எம்.ஜி.ஆர்
எப்போதும் எம்.ஜி.ஆர்
கட்சி பேதமில்லாமல் எல்லார் உதடுகளும் உச்சரிப்பது எம்.ஜி.ஆர்., பெயரைத் தான்; அவரை பார்க்க ஓர் அரசு ஊழியர் வருகிறார். ‘எனக்கு இப்போது தான் திருமணமாகி உள்ளது. மனைவியும் அரசு ஊழியர். ஆனால், அவர் ஒரு ஊரில் இருக்கிறார்; எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்...?’ என்கிறார். கணவனும், மனைவியுமாக இருக்கும் அரசு ஊழியர்கள் ஒரே ஊரில் பணியாற்ற உத்தரவிடுகிறார்.‘கிராம கோவிலில் அன்றாடம் விளக்கேற்ற விரும்புகிறோம். அதற்கு எண்ணெய் வாங்க வழிஇல்லை...’ என்று பக்தர் எழுதுகிறார். இரண்டு நாளில் தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில் பூஜை நடக்க நடவடிக்கை எடுக்கிறார். தபால் கார்டில் எம்.ஜி.ஆருக்கு விண்ணப்பித்து எம்.எல்.ஏ.,வான தொண்டரும் உண்டு. இதை எல்லாம் அவரது உதவியாளர் சொல்ல, சுவாரசியமாக தொகுத்து உள்ளார். பொருத்தமான படங்களும் உள்ளன.– ராஜேஷ்




