/ பெண்கள் / எவரி மாம் இஸ் எ சூப்பர் மாம் (ஆங்கிலம்)

₹ 340

அன்னையர் பெருமையை உண்மை நிகழ்வுகள் வழியாக விளக்கும் நுால். சிறு தொண்டர் மனைவி திருவெங்காட்டு நங்கையார் ஒரே மகனை, சிவனடியாருக்கு கொடுத்த கதை கூறப்பட்டுள்ளது. திருமணம் முடித்த 15ம் நாளில், கணவனை இழந்து, கருவில் வளர்ந்த மகளுக்காக தோற்றத்தை ஆணாக மாற்றி வாழ்ந்த பெண்ணின் கதை உருக்கம் தருகிறது. சுவாமி விவேகானந்தர் வெளிநாட்டு பயணம் முடித்ததும், அன்னை புவனேஸ்வரி கையால் உணவு உண்டது பற்றி கூறப்பட்டுள்ளது. சகோதரி நிவேதிதா, அன்னை குறித்து எழுதிய கடிதம்- உருக்கம் தருகிறது. பல்வேறு உயிரினங்களின் தாய்ப்பாசம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அன்னையர் பெருமையை அறிய வைக்கும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து


புதிய வீடியோ