/ மருத்துவம் / கண் நோய்களும் பாதுகாப்பு முறைகளும்
கண் நோய்களும் பாதுகாப்பு முறைகளும்
கண்ணின் அமைப்பு, செயல்திறன், நோய் தீர்க்கும் மருத்துவத்தை விவரிக்கும் நுால். கண்ணின் வெளி, உட்புறத் தோற்றத்தை துல்லியமாக விளக்குகிறது. எப்போதெல்லாம் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பட்டியலிடுகிறது. கண் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. கண்களை பரிசோதிப்பதற்கு 12 முறைகளை தெரிவிக்கிறது. கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, சமச்சீரற்ற பார்வை போன்ற குறைபாடுகளை சரி செய்யும் வழிமுறைகளை அறியத் தருகிறது. கண் தொடர்பான தகவல்களை 30 தலைப்புகளில் வெளிப்படுத்துகிறது. தேவைப்படும் பகுதிகளில் படங்களை தந்து, மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பது போல் எளிமையாக உள்ள நுால்.– முகிலை ராசபாண்டியன்