/ வாழ்க்கை வரலாறு / எழுத்து – சேவை என்.சி.எம்

₹ 290

எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் வாழ்க்கை வரலாற்று நுால். திருச்சி, நம்புகுறிச்சி துவங்கிய வாழ்க்கை பயணம் கதை போல், எளிய நடையில் தரப்பட்டுள்ளது. எழுத்தாளராகும் ஆசையில் எடுத்த முயற்சிகள், நம்பிக்கை தரும் சுவடுகளாக பதிவாகியுள்ளன. முக்கிய திருப்பமாக, பிரபல இதழாளர் அந்துமணியுடனான சந்திப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சுதந்திரமாக எழுதவும், வெளிநாட்டு பணியை ஏற்கவும், சேவை ஆற்றுவதற்கும் அந்துமணியே துாண்டுதலாக இருந்தது நெகிழ்வுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபலங்களுடனான நெருக்கத்தை சேவைக்கு பயன்படுத்தியது பற்றி கூறப்பட்டுள்ளது. சலிப்பற்ற உழைப்பு மற்றும் முயற்சியால் கிடைத்த பலன்களை முன்வைக்கிறது. அரசு, அரசியல், சினிமா, தொழில் பிரபலங்களுடனான தொடர்பு குறித்த விபரங்கள் உள்ளன. குறிக்கோளுடன் திட்டமிட்டால் முன்னேற முடியும் என இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் சுவாரசியம் மிக்க வாழ்க்கை வரலாற்று நுால். – ராம்


சமீபத்திய செய்தி