/ அரசியல் / கட்டணம் வாங்காத கல்லூரி
கட்டணம் வாங்காத கல்லூரி
மேடை பேச்சின் பொற்காலத்தை எடுத்துக் காட்டும் சொற்பொழிவுகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மேடை பேச்சில் கோலோச்சிய அண்ணாதுரை, நெடுஞ்செழியன், புலமைப்பித்தன் உள்ளிட்டோரின் சொற்பொழிவுகளை அள்ளி தருகிறது. சமுதாய மேம்பாடு மற்றும் இலக்கியச் சுவையுடன் உள்ளது. உலகமயமாக்கல், பொருளாதார சீரமைப்பு, ஜாதி ஒழிப்பு, பொதுவுடைமை, அரசியல், தாய்மொழி உணர்வு என அனைத்து வகையிலும் அமைந்த 60 சொற்பொழிவுகள் இடம்பெற்றுள்ளன. நாட்டு முன்னேற்றம் குறித்த கூர்மையான பார்வையுடன் உள்ளது. பேச்சாற்றல் கலையை விரும்பும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டுகிறது. எழுத்தாளர்கள், மேடை பேச்சாளர்கள், அரசியல்வாதிகள் தவறாமல் படிக்க வேண்டிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு