/ மருத்துவம் / ஆரோக்கியம் தரும் தூக்கம்

₹ 60

துாக்கத்தின் அவசியம் பற்றி உரைக்கும் நுால். துாக்கம் ஏன் அவசியம், துாக்கம் நம்மை தழுவுவது எப்படி, துாக்கம் வரலைன்னு புலம்பாதீர் உட்பட 19 தலைப்புகளில் அமைந்துள்ளது. துாங்கும் போது தான் மூளை சுறுசுறுப்பு அடைகிறது. பிறந்த குழந்தை 20 மணி நேரம் துாங்க வேண்டும். வளரும் குழந்தை 12 மணி நேரம் துாங்குவது அவசியம். ஆண்களுக்கு ஆறு மணி நேரமும், பெண்களுக்கு ஏழு மணி நேரமும் துாக்கம் அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. உண்பதை பொறுத்து துாக்கம் அமையும் என்கிறது. புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளான முட்டை, இறைச்சி, கொட்டை வகைகள், கொய்யா, பேரீச்சை போன்ற உணவுகள், துாக்கத்தை ஊக்குவிக்கும் என்கிறது. பகல் துாக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ள நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை