/ உளவியல் / ஹிப்னாடிசம் செய்முறை சூத்திரங்கள்
ஹிப்னாடிசம் செய்முறை சூத்திரங்கள்
மனோவசிய கலை குறித்து விளக்கம் தரும் நுால். மனதை இரண்டாகப் பகுத்து கூறுகிறது. ஆழ்மனம் அமைதியின் இருப்பிடமாக இருப்பதால் அது வெளிவிவகாரங்களை பற்றி கவலைப்படுவதில்லை என குறிப்பிடுகிறது. நன்மை என்பது ஆழ்மனதின் வெளிப்பாடாக கூறப்பட்டுள்ளது. தனிமையில் அமரும் மனநிலை மனோவசியத்தின் அடிப்படை என்கிறது. கவன மறதிக்கும், ஞாபக மறதிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது.கண்ணுக்கு புலப்படாத சூட்சும உடலை தொட்டுப் பார்க்கும் மனோநிலையை வளர்க்க வேண்டும் என்கிறது. அரும்பு, முகை, மொட்டு, மலர் என்ற தலைப்புகளில் மனோவசிய சூத்திரங்கள் தரப்பட்டுள்ளன. படிக்க துவங்கினால் மனதை கட்டி இழுக்கும் நுால்.– -முகிலை ராசபாண்டியன்




