/ இசை / இலக்கிய கதம்ப மாலை
இலக்கிய கதம்ப மாலை
பணி நிமித்தமாக தேசிய அளவில் சுற்றித் திரிந்தவர் அவ்வப்போது எழுதிய படைப்புகளின் தொகுப்பு நுால். மகாகவி பாரதி மீது பற்றுடன் படைப்புகளில் தெய்வப் பற்றும், தேசப் பற்றும், சமுதாய அக்கறையும் மிகுந்துள்ளன.முதலில் கவிதைப் பூக்கள் மணம் வீசுகின்றன. தாய்மொழி மட்டும் போதாது; தலை நிமிர பிற மொழிகளையும் கற்கத் துாண்டுகிறது. உருவகக் கதைகளில் ஆல மரம் பேசும் கற்பனை மிக அருமையாக உள்ளது. சிறுகதைகள் 15 உள்ளன. ஒவ்வொரு கதையும் வித்தியாசமான சிந்தனைகளை தருகின்றன.அமுத மொழிகள் என்ற சிந்தனைத் துளிகள் கடவுள், இயற்கை, மனிதன், உணவு, உணர்வு போன்ற தலைப்புகளில் நிரப்புகின்றன. ஆழமான, அழகான எழுத்து ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழிக்கு கதம்ப மாலை நுால். – -முனைவர் மா.கி.ரமணன்