இஸ்லாமியர் காலத் தமிழ் மக்கள் வரலாறு
பக்கம்: 208 தமிழ்ச் சமுதாய வரலாற்றில், பாண்டியர் காலத்தின் நிறைவுப் பகுதியில் இஸ்லாமியர் நுழைவு திகழ்கிறது. மதுரையை மையமாக வைத்து இஸ்லாமியர்கள், 60 ஆண்டுகளே ஆண்டாலும் அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டு அரசியலிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் மிகப் பெரியவை. டில்லியை மையமாக வைத்து இஸ்லாமிய அரசியல் இங்கே இடம் பெற்றபோது, அவர்களது பழக்க வழக்கங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் இஸ்லாமியர் அல்லாத தமிழ் மக்களிடமும் பரவின. உணவு, உடை, குழந்தைப் பிறப்பு, சுன்னத் முறை, மூக்குத்தி முதலான அணிகலன்கள், கைலி (லுங்கி) என, உடுத்தும் உடையிலும் கூடப் பெருமாற்றம் நிகழ்ந்தது. பிரியாணி என்ற ஆட்டிறைச்சி உணவு, இஸ்லாமியர் வரவிற்குப் பின்புதான் தமிழரிடம் அதிமாக பழக்கமாயிற்று!தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் தமிழர்களே... தமிழர் அல்லாத அயல் நாட்டவர் இல்லை எனபதை ஆசிரியர் கூறுகிறார். படிக்க வேண்டிய நூல்.