/ வரலாறு / கல்வெட்டில் தேவதாசி

₹ 150

தேவதாசிகள் குறித்து ஆய்வு செய்து தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள நுால். பழந்தமிழகத்தில் பெண்களின் ஒரு பிரிவினர் நிலையை எடுத்துக்காட்டும் ஆவணமாக திகழ்கிறது.தமிழக வரலாறு குறிப்பிடும் தேவதாசி, தேவரடியார், பதியிலார் போன்ற சொற்களின் பயன்பாடு, அவற்றின் பின்னணியில் உள்ள தகவல்களை எடுத்துரைக்கிறது. இந்த சொற்கள் வழக்கில் இருந்த காலம், பண்டைய மன்னர் காலத்தில் இருந்த வழக்கம் குறித்த விபரங்களை ஆய்வு செய்து, தக்க சான்றுகளுடன் பதிவு செய்துள்ளது.குறிப்பிட்ட பெயருடன் வழங்கப்பட்ட பெண்களுக்கு சமூகத்தில் இருந்த மதிப்பு, மரியாதை, வாழ்க்கை நிலை குறித்து விரிவாக தகவல்களை பதிவு செய்துள்ளது. தமிழக வரலாற்றில் பெண்களின் நிலையை அலசி தகவல்களை எடுத்துரைக்கும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை