/ வாழ்க்கை வரலாறு / கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபராக பதவி வகிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றிப் பயணம் குறித்த நுால். எளிய தலைப்புகளில் படங்களுடன் செய்தி போல் சொல்லப்பட்டுள்ளது.துணை அதிபர் தேர்தல் பற்றிய விபரங்கள் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தலின் போது முதல்நிலையில் கமலா தேர்வானது குறித்த விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றது குறித்த தகவல்களும் உள்ளன.துணை அதிபராக கமலா தேர்வு பெற்றதும், உறவினர் அளித்த பேட்டியும் தரப்பட்டுள்ளது. இந்தியவம்சாவளியில் பிறந்த கமலா, நம் கலாசாரத்தை மறக்காத பண்பை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து கமலாவின் குடும்ப பின்னணி, வாழ்க்கையில் முன்னேறியது குறித்து தரப்பட்டுள்ள சாதனை பெண் பற்றிய நுால்.– ஒளி