/ ஆன்மிகம் / கம்ப ராமாயணம்
கம்ப ராமாயணம்
வால்மீகி ராமாயணத்தை முதலாகக் கொண்டு கம்பர் இயற்றிய ராமாவதாரம் தமிழ்க் காவியம் ஆறு காண்டங்களுடன் அமைந்துள்ள நுால். உ.வே.சாமிநாதையர் தரும் குறிப்புகள் மற்றும் விரிவான உரையுடன் உள்ளது. பால காண்டம் துவங்கி சுந்தர காண்டம் வரை ஐந்து காண்டங் களுக்கும் ஐந்து தொகுதிகளும், யுத்த காண்டத்திற்கு நான்கு தொகுதிகளுமாக உள்ளது. அறுபது ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. கதைப்போக்கு நிகழ்வுகள் மூல நுாலுடன் பெரிதும் ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் தன்மை, காலம் மற்றும் பண்பாட்டுக்கு ஏற்றாற்போல் மாற்றங்களையும் செய்ய தவறவில்லை. தனித்த சித்திரங்களுடன் இடம்பெற்றுள்ள நுால். – சிவா




