/ கட்டுரைகள் / கம்பன் புதிய பார்வை
கம்பன் புதிய பார்வை
ராமாயண காவியத்தை தமிழில் படைத்த கம்பர் குறித்து புதுமை தகவல்களை தரும் நுால். சிறந்த படைப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றது மறுபதிப்பாக மலர்ந்துள்ளது. கம்பரின் சமய கொள்கையும் அலசப்பட்டுள்ளது. கம்பர் படைத்த ராமாயணத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் சிறப்பு கூறுகளும் தெளிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது. அதன் வழியாக கம்பர் சொல்லும் கருத்தை தெளிவுபடுத்தி நிறுவுகிறது. சங்கப்பாடல்களின் பின்னணியில், கம்பரின் இலக்கியம் குறித்த கருத்துகளையும் முன் வைக்கிறது. பழந்தமிழரின் புகழ் பெற்ற இலக்கியங்களை மேற்கொளாக முன்வைத்து கம்பரின் படைப்பு ஆராயப்பட்டுள்ளது. கம்பரின் இலக்கிய செயல்பாட்டை புதிய பார்வையில் அலசி ஆராய்ந்து கருத்துகளை முன்வைக்கும் நுால். – மதி




