/ ஜோதிடம் / கனவுகளும் பலன்களும்
கனவுகளும் பலன்களும்
மாயஜால விளையாட்டான கனவுகளை ஆராய்ந்து உரிய பலன்களை விவரிக்கும் நுால். ஏழை, பணக்காரன், தலைவர், தொண்டர் என்ற பேதமின்றி பாகுபாடில்லாமல் வரக்கூடிய கனவுகள் பற்றி விவரிக்கிறது. அறிவுக்கும், செயல்பாட்டுக்கும் தொடர்புடையவற்றை வகைப்படுத்தி கூறுகிறது. சம்பந்தமில்லாதவை பற்றியும் எடுத்துரைக்கிறது. துாக்கம் கலைந்ததும் அகன்று போவது, நினைவில் நிற்பது என கனவுகளை வகைப்படுத்துகிறது. எதை கனவாக கண்டால் என்ன பலன் ஏற்படும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. கனவு கண்டதால் உருவான கோவில்கள் பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள சுவாரசியம் மிக்க தகவல்களையும் விவரிக்கிறது. கனவு பற்றிய சிந்தனையுள்ள நுால். – மதி