/ கதைகள் / கண்ணன் கதைகள்

₹ 130

கண்ணன் கதைகள் என்­றாலே, கரும்பு தின்­கிற மாதி­ரிதான். கரும்பை எங்கே கடித்­தாலும் இனிக்கும். கண்ணன் கதை­களில் எதைப் படித்­தாலும் மகிழ்வும், பர­வ­சமும் கூடும்.இந்த நூலில், ௨௬ கதைகள் கண்ணன் பெருமை பேசு­கின்­றன. முதல் கதை, ‘அந்த மூன்று கத்­திகள்’. அதி­லேயே, உத்­தங்க மக­ரி­ஷிக்கு, மனி­தரின் இன­வேற்­றுமை, உயர்வு தாழ்வு காண்­பது தவறு என்று கண்­ண­பிரான் பாடம் நடத்­து­கிறார். அவ­ருக்கு மட்­டு­மல்ல; உலகோர் அனை­வ­ருக்­கும் தான்.பாண்­ட­வரை அழிக்க, ஐந்து தங்க அம்­பு­களை தன் தவ ­வல்­ல­மையால் தோற்­று­விக்­கிறார் பீஷ்மர். அவற்றைப் பிடி­வா­த­மாக பெறு­கிற துரியன், அர்ச்­சு­ன­னி­டமே ஏன் ஒப்­ப­டைக்­கிறான் என்­பதை விவ­ரிக்­கி­றது ஒரு கதை. கண்­ண­னையே எதிர்த்து அர்ச்­சுனன் போரிடத் துணி­வது ஏன் என, எடுத்­து­ரைக்­கி­றது இன்­னொரு கதை.நாரா­யண பட்­டத்­திரி, பக்த ஜனாபாய், ஞானேஸ்வர் கதை­களும் இதில் இடம் பெற்­றுள்­ளன.எழுத்­தாளர் கவு­தம நீலாம்­பரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை