/ ஆன்மிகம் / கந்தர் சஷ்டி கவசம்

₹ 55

முருக பெருமான் குறித்த தோத்திரங்களின் தொகுப்பு நுால். தேவராய சுவாமி அருளிய கந்தர் சஷ்டி கவசம் முதலில் உள்ளது. இதில் உள்ள பாடல்கள் எளிமையாக, பொருள் விளங்கும்படி தரப் பட்டுள்ளது. சச்சிதானந்த சுவாமி இயற்றிய வேல்மாறல் மஹா மந்திரம், அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் வேல் பற்றியதை தொகுத்து தரப்பட்டுள்ளது. இதை அனுதினமும் பாராயணம் செய்தால் திருமண தடை நீங்கும், புத்திர பாக்கியம் உண்டாகும் என்கிறது. மூன்றாவதாக, ‘ஸ்கந்த குரு கவசம்’ ராக குறிப்புகளுடன் உள்ளது. குமரகுருதாச சுவாமி அருளிய ஷண்முக கவசம், அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் உள்ளது. இடும்பன் கவசத்தை பாராயணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று உரைக்கும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து