/ கதைகள் / காவல் துறையின் கதை

₹ 470

காவல்துறையின் வளர்ச்சி, வரலாற்று தகவல்கள் உடைய நுால். மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு காவல்துறை. மக்கள் பயமின்றி வாழ பாதுகாப்பு அளிக்கிறது. இந்த அமைப்பு எப்படி தோன்றியது, எப்படி எல்லாம் வளர்ந்து விரிந்து நிறுவனமானது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.போலீஸ் துறையின் உதயம், துப்பறியும் கலையில் ஏற்பட்ட வளர்ச்சி, உலக அளவில் குற்ற தடுப்பு நடவடிக்கை, குற்றங்களின் தத்துவம், அறிவியல் ரீதியான விசாரணை நடைமுறை என பலவிதமாக விபரங்களை தருகிறது. தகவல்களை திரட்டி படிக்க உகந்த மிக எளிய நடையில் முன்வைக்கிறது. போலீஸ் துறையின் அமைப்பு சார்ந்த செய்திகளும் சொல்லப்பட்டுள்ளன. சமூகத்தை இயங்க வைக்கும் போலீஸ் துறையை வரலாற்று ரீதியாக அறியத்தரும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை