/ கட்டுரைகள் / க.ப.அறவாணரின் 50 ஆண்டுத் தமிழ்த் தொண்டு
க.ப.அறவாணரின் 50 ஆண்டுத் தமிழ்த் தொண்டு
அறவாணரின் தமிழ்ப் பணிகளை தொகுத்து தரும் நுால். அறிஞர் அறவாணன் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். வாழ்நாளில், 1967 முதல், 2017 வரை அவர் எழுதிய ஆய்வு கட்டுரைகள் தலைப்பு வாரியாக பட்டியல் போல் தரப்பட்டுள்ளன. அவை, இதழ்களில் பிரசுரமாகியும், தொகுப்பாக வெளியிடப்பட்டும் உள்ளன. கட்டுரைகள் வெளியான இதழ்கள், பிரசுரமான தேதி, கருத்தரங்கங்களில் வாசிக்கப்பட்டது பற்றிய தகவல்களும் உள்ளடக்கப்பட்டு ஒருங்கிணைத்து தரப்பட்டுள்ளது. அறவாணர் மறைவுக்கு பின், பிரசுரிக்கப்பட்ட புத்தக விபரமும் தனியாக தரப்பட்டுள்ளது. அறவாணர் குறித்து ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால். – ராம்