/ ஆன்மிகம் / குடைவரைக் கோயில்கள்

₹ 100

இமயமலையில் அமர்நாத், வைஷ்ணவிதேவி, சிவகோரி தலங்களுக்கு யாத்திரை செய்த அனுபவத்தை பதிவு செய்துள்ள நுால். வழிகாட்டும் விதமாக உள்ளது. கோவில்களின் அமைப்பு குறித்த விபரங்கள் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்த யாத்திரையின் சிறப்பு, அதன் நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குடைவரை கோவில்கள் பற்றிய வரலாற்று விபரங்களும் தரப்பட்டுள்ளன.தொடர்ந்து, அமர்நாத் குகைக் கோவிலுக்கு யாத்திரை செல்வது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவதேவி, சிவகோரி கோவில்களுக்கு யாத்திரை செல்வது குறித்து விபரமாக கூறப்பட்டுள்ளது. ஆன்மிக யாத்திரையை விரும்புவோருக்கு உதவும் வகையிலான நுால்.– ராம்